Friday 7 December 2012

நமது வாழ்கையில் நழுவ விட கூடாதது எது

நமது வாழ்கையில் நழுவ விட கூடாதது எது என்றால் ....???

வாழும் நமது வாழகயையே நழுவ விட கூடாதுதான் நமக்கு வாழ்வின் அனைத்தையும் பக்குவமாக புரியவைக்கும் இந்த வாழ்க்கை எப்போதும் நாம் நழுவ விட கூடாது அதே போல இந்த வாழ்க்கையில் நமது ம்யர்ச்சியையும் நழுவ விட கூடாது.

எப்போது நமது முயற்ச்சியை நழுவ விடுகிறோமோ அப்போது நமது வாழ்கையின் முன்னேற்றத்தை நழுவவிடுகிறோம் முன்னேற்றம் நழுவும் போது வாழ்கையும் நழுவிவிடும்.

நல்ல வாய்ப்பை எப்போதும் நழுவ விட கூடாது வாய்ப்பு என்பது நமக்கு கிடைக்கும் அதிஷ்ட்டம் அதையும் நழுவ விட கூடாது நமக்கு கிடைக்கும் ஒவ்வொன்றும் பொக்கிஷம் நமது மனித வாழ்வில் அனைத்தும் நழுவ விட கூடாத ஒன்றுதான்.

என்றும் அன்புடன் உங்கள் சோதிடர் Adithya Vishakha.

Wednesday 5 December 2012

இன்பம் துன்பம்


நீ ஒவ்வொரு முறையும் புதிதாய் பிறக்கின்றாய் உன் மனமகிழ்வில்.

நீ ஒவ்வொரு முறையும் இறகின்றாய் உனக்கு துன்பங்கள் வரும்போது.

உனக்கு இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகிறது அதுபோல நீ தினமும் இறக்கிறாய் தினமும் பிறக்கிறாய்.

நீ பிறக்கவும் இல்லை நீ இறக்கவும் இல்லை.

என்றும் அன்புடன் உங்கள் சோதிடர் ஆதித்யா விசாகா .

https://www.facebook.com/kgadithyavishakha

யார் அனாதைகள் ....???


இங்கு யாரும் அனாதைகள் இல்லை 

அனாதைகள் அனைவரும் உருவாக்கபடுகின்றன்ர் பிறப்பதில்லை அந்த உருவாக்கம் என்பது மனிதனின் சுயநலத்தால் கூட இருக்கலாம் அல்லது சந்தர்ப்பங்களில் நிகழும் விடயமாக கூட இருக்கலாம்.

ஒவ்வொருவரும் சிந்தியுங்கள் நாம் தனிமை படுத்தும் போது நாமும் அனாதைகள் தான் அப்போது அவர்களை நாம் தனிமை படுத்தவில்லை என்றால் அவர்களும் அனாதைகள் இல்லை.

என்றும் அன்புடன் உங்கள் சோதிடர் ஆதித்யா விசாகா  

Tuesday 4 December 2012

ஐயப்ப மலைக்கு மாலை

சுவாமி சரணம் ,, ஐயப்பா சரணம்.

யப்ப மலைக்கு மாலை போட்டு செல்கின்றனர் அதன் காரணாம் இப்படியும் இருக்கலாம் ....!என் மனதில் தோன்றியதை உங்களுடன் பகிர்கிறேன்.


அதாவது 48 நாள் விரதம் இருந்து பின்பு சுவாமி தரிசனம் காண செல்ல வேண்டும் என்பது அவர்கள் வாழ்வில் நெறிமுறைகளை கற்று அதன் படி நடக்க வேண்டும் என்பதாக கூட இருக்கலாம் 

விரதம் என்பது உண்ணாமல் இருப்பது அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள் அதாவது அவர்கள் கோவபடாமல் வசதி இருந்தும் தரையில் படுத்து உறங்குவது , அதிகாலை எழுந்து குளிப்பது , உணவு முறைகளை சரி செய்வது மற்றவரிடம் அன்பாக பழகுவது மது மாது போன்ற பழக்க வழக்கம் இல்லாமல் இருப்பது , இறக்க குணம் பிறக்கும் தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம எழும , இப்படி பல பழக்க வழக்கத்தை கடைபிடிக்க படுகிறது அதில் முக்கியமான ஒன்று பொய் பேசாமல் இருப்பது. இவையே மனிதனின் மனதை ஒழுங்கு படுத்தும். இவைகள் தான் விரதம் ஆகும்.

அடுத்து அனைத்து மனிதர்களையும் கடவுளாக பாவித்து அனைவரையும் சுவாமி என்று அழைக்கிறார்கள் அப்போது அவர்கள் மனதில் அவரும் ஐயப்பன் என்ற உணர்வை கொண்டு உரைக்க வேண்டும் அதாவது அனைவரையும் சுவாமி என்று கூப்பிடுவார்கள் அப்போது அந்த மனிதரும் சுவாமி என்றே அழைப்பர் அங்கு அனைவரும் ஒன்றே இறைவன் நம்முள் இருப்பதாக அர்த்தம் கொள்ள படுகிறது அதனால் சுவாமி என்று அழைக்கிறோம். அதனால் அவரும் இவர் மீதும் ஐவரும் அவர் மீதும் கோவம் வஞ்சகம் பொய் களவு ஏமாற்றுதல் இப்படி பட்ட செயல்கள் இல்லாமல் போகி விடுகிறது.

இத்துனையும் நமது ஒழுக்கம் என்பதை விட மனிதனை வாழ்வில் நிலை படுத்த அமைக்கபட்ட ஒன்றாகும் இதுவும் ஒரு தியான முறைதான் நமது மனம் இந்த நாள் சரியாக பழகி கொண்ட பிறகு பின்பும் அதை மனிதன் பின்பற்ற வேண்டும் அவன் வாழ்நாள் முழுவதும் அதை கடைபிடித்தல் எங்கும் பிரச்சனை வராது அனைவரும் சான்தொசமாக இருப்பார்கள் என்பதைன் நோக்கமே ஆகும்.

ஆனால் இன்று ஒரு நாள் மாலை போட்டுகொண்டு செல்பவரும் நான்கு நாள் மாலை போட்டு ஐந்து நாள் ஒரு வாரம் இப்படி மாலை போட்டு கொண்டு செல்பவர்களும் உண்டு இன்னும் சிலர் அது கூட இல்லை சிலருக்கு தன்னை விளம்பர படுத்திக்கொள்ள நாகரீகம் என்பதை போலவும் இங்கு நாமும் சென்றால் நல்லவன் என்று நம்புவார்கள் என்றும் இப்படி பல விதமான எண்ணம கொண்டு சொல்கின்றனர் அப்படி செல்வாதால் எவ்வித பலனும் இல்லை அது ஒரு பகட்டு வேஷம் ஆகும் . எந்த பிரோயோசனம் இல்லை மனம் பக்குவ படாது.

வருடத்திற்கு ஒரு முறை கையாண்டால் அந்த வருடம் முறையும் இந்த தியானத்தை சரியாக செய்து அதாங்க இந்த விரதமுரையை கையாண்டால் நமது மனம் செம்மை பட்டு வாழ்வின் நெறிமுறைகளை கற்று கொண்டு சுபிச்சமாக வாழ முடியும் என்பதை அழகாக எளிய நடைமுறையில் வகுத்து வைத்து உள்ளார்கள் நம்மில் முன்னோர் அல்லது சித்தர்கள் இப்படி பலர் ஆதை நாம் இன்று எப்படி கடைபிடிக்கிறோம் என்று சிந்தித்து பார்த்தல் புரியும்.

இதற்க்கு மேல போனாலும் நீங்க படிக்காமல் லைக் போடுவிங்கன்னு தெரிஞ்சு இத்தொட நிறுத்தி கொள்ளுகிறேன் உணர்ந்து செயல் படுங்கள் உங்கள் வாழ்வில் வெற்றி பெறுங்கள் 

சுவாமியேயேயேயேயேயேய் சரணம் ஐயப்பா ........!!

என்றும் அன்புடன் சோதிடர் Adithya Vishakha

செருப்பு


எந்த காரணமும் இல்லாமல் உன் பாதம் பட்டு உனது மொத்த உடலையும் சுமந்து தன்னை காக்காமல் நீ இழுக்கிற இழுப்புக்கெல்லாம் உன் சொல்படி கேட்டு தன் சுய என்னத்தை புதைத்து உனக்கா தேய்கிறது உன் செருப்பு ஆனால் உன் மனம் இன்னும் அந்த பக்குவ நிலை அடையவில்லை .
....!!!

நீ எப்போது ஒவ்வொரு முறை உன் செருப்பை மாற்றும் போது நீ உன் கெட்ட குணங்களை விட்டிருந்தால் கூட இன்று நீ புத்தம் புது மனிதனாக இருந்திருக்கலாம் ஆனால் நிலை என்ன மானிடனே ....???

என்றும் அன்புடன் உங்கள் சோதிடர் ஆதித்யா விசாகா .

வாழ்கையில் முடிவே மிக முக்கியமானது

நம் வாழ்கையில் நாம் எடுக்கும் முடிவே மிக முக்கியமானது அதை சரியாக எடுங்கள் ......!!

முடிவை செயலாற்றிய பின் அதன் விளைவு என்பதை மாற்றி கொள்ள இயலாது ஆனால் முடிவை மாற்றி கொள்ள முடியும் அதனால் முடிவு எடுக்கும் முன் நன்றாக யோசித்து விட்டு ஆதை செயல் படுத்துங்கள்.

உங்கள் வாழ்க்கை உங்கள் முடிவில் அதாவாது உங்கள் கையில்.

என்றும் அன்புடன் உங்கள் சோதிடர் ஆதித்யா விசாகா.

அசைவ உணவுசாப்பிட்டுவிட்டு கோவிலுக்குப் போகக்கூடாதா ...??


பொதுவாகவே உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதும் இதற்கு உதாரணமாக கூறலாம். அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது மனதளவில் மந்தநிலையை ஏற்படுத்தும். பொதுவாக கோயிலுக்குச் செல்லும் போது சுத்தமாகச் செல்ல வேண்டும் என்று கூறுவது உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் பொருந்தும். 
 மனதளவில் மந்தநிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும் போது அந்த சக்திகளை உணரக் கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார். பொதுவாக அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும் தன்மை படைத்தவை. எனவேதான், கோயிலுக்குச் செல்லும் போது எளிமையான உணவை மிதமான அளவில் உண்டு,
 மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். ஆன்மீகக்கடலின் கருத்து என்னவெனில்,உக்கிரமான ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் கோவிலுக்கு அசைவம் சாப்பிட்ட அன்று குளித்தப்பின்பும் போகாமலிருப்பது மிக நன்று.