Tuesday 4 December 2012

ஐயப்ப மலைக்கு மாலை

சுவாமி சரணம் ,, ஐயப்பா சரணம்.

யப்ப மலைக்கு மாலை போட்டு செல்கின்றனர் அதன் காரணாம் இப்படியும் இருக்கலாம் ....!என் மனதில் தோன்றியதை உங்களுடன் பகிர்கிறேன்.


அதாவது 48 நாள் விரதம் இருந்து பின்பு சுவாமி தரிசனம் காண செல்ல வேண்டும் என்பது அவர்கள் வாழ்வில் நெறிமுறைகளை கற்று அதன் படி நடக்க வேண்டும் என்பதாக கூட இருக்கலாம் 

விரதம் என்பது உண்ணாமல் இருப்பது அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள் அதாவது அவர்கள் கோவபடாமல் வசதி இருந்தும் தரையில் படுத்து உறங்குவது , அதிகாலை எழுந்து குளிப்பது , உணவு முறைகளை சரி செய்வது மற்றவரிடம் அன்பாக பழகுவது மது மாது போன்ற பழக்க வழக்கம் இல்லாமல் இருப்பது , இறக்க குணம் பிறக்கும் தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம எழும , இப்படி பல பழக்க வழக்கத்தை கடைபிடிக்க படுகிறது அதில் முக்கியமான ஒன்று பொய் பேசாமல் இருப்பது. இவையே மனிதனின் மனதை ஒழுங்கு படுத்தும். இவைகள் தான் விரதம் ஆகும்.

அடுத்து அனைத்து மனிதர்களையும் கடவுளாக பாவித்து அனைவரையும் சுவாமி என்று அழைக்கிறார்கள் அப்போது அவர்கள் மனதில் அவரும் ஐயப்பன் என்ற உணர்வை கொண்டு உரைக்க வேண்டும் அதாவது அனைவரையும் சுவாமி என்று கூப்பிடுவார்கள் அப்போது அந்த மனிதரும் சுவாமி என்றே அழைப்பர் அங்கு அனைவரும் ஒன்றே இறைவன் நம்முள் இருப்பதாக அர்த்தம் கொள்ள படுகிறது அதனால் சுவாமி என்று அழைக்கிறோம். அதனால் அவரும் இவர் மீதும் ஐவரும் அவர் மீதும் கோவம் வஞ்சகம் பொய் களவு ஏமாற்றுதல் இப்படி பட்ட செயல்கள் இல்லாமல் போகி விடுகிறது.

இத்துனையும் நமது ஒழுக்கம் என்பதை விட மனிதனை வாழ்வில் நிலை படுத்த அமைக்கபட்ட ஒன்றாகும் இதுவும் ஒரு தியான முறைதான் நமது மனம் இந்த நாள் சரியாக பழகி கொண்ட பிறகு பின்பும் அதை மனிதன் பின்பற்ற வேண்டும் அவன் வாழ்நாள் முழுவதும் அதை கடைபிடித்தல் எங்கும் பிரச்சனை வராது அனைவரும் சான்தொசமாக இருப்பார்கள் என்பதைன் நோக்கமே ஆகும்.

ஆனால் இன்று ஒரு நாள் மாலை போட்டுகொண்டு செல்பவரும் நான்கு நாள் மாலை போட்டு ஐந்து நாள் ஒரு வாரம் இப்படி மாலை போட்டு கொண்டு செல்பவர்களும் உண்டு இன்னும் சிலர் அது கூட இல்லை சிலருக்கு தன்னை விளம்பர படுத்திக்கொள்ள நாகரீகம் என்பதை போலவும் இங்கு நாமும் சென்றால் நல்லவன் என்று நம்புவார்கள் என்றும் இப்படி பல விதமான எண்ணம கொண்டு சொல்கின்றனர் அப்படி செல்வாதால் எவ்வித பலனும் இல்லை அது ஒரு பகட்டு வேஷம் ஆகும் . எந்த பிரோயோசனம் இல்லை மனம் பக்குவ படாது.

வருடத்திற்கு ஒரு முறை கையாண்டால் அந்த வருடம் முறையும் இந்த தியானத்தை சரியாக செய்து அதாங்க இந்த விரதமுரையை கையாண்டால் நமது மனம் செம்மை பட்டு வாழ்வின் நெறிமுறைகளை கற்று கொண்டு சுபிச்சமாக வாழ முடியும் என்பதை அழகாக எளிய நடைமுறையில் வகுத்து வைத்து உள்ளார்கள் நம்மில் முன்னோர் அல்லது சித்தர்கள் இப்படி பலர் ஆதை நாம் இன்று எப்படி கடைபிடிக்கிறோம் என்று சிந்தித்து பார்த்தல் புரியும்.

இதற்க்கு மேல போனாலும் நீங்க படிக்காமல் லைக் போடுவிங்கன்னு தெரிஞ்சு இத்தொட நிறுத்தி கொள்ளுகிறேன் உணர்ந்து செயல் படுங்கள் உங்கள் வாழ்வில் வெற்றி பெறுங்கள் 

சுவாமியேயேயேயேயேயேய் சரணம் ஐயப்பா ........!!

என்றும் அன்புடன் சோதிடர் Adithya Vishakha

No comments:

Post a Comment